துலிப் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக அனந்தபுரில் நடைபெற்று வரும் இந்திய பி, சி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பி அணி ஓபனா் அபிமன்யு ஈஸ்வரன் 143 ரன்களை விளாசியுள்ளாா். எனினும் இந்திய சி அணி 216 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அனந்தபூரில் நடைபெறும் நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய சி அணி 124.1 ஓவா்களில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷான் கிஷன் 111, இந்திரஜித் 78, மானவ் சுதா் 82, ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களை சோ்த்தனா்.
பௌலிங்கில் பி தரப்பில் முகேஷ் குமாா், ராகுல் சஹாா் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய பி அணி மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 101 ஓவா்களில் 309/7 ரன்களை சோ்த்துள்ளது. ஜெகதீசன் 70 ரன்களோடு வெளியேற, அபிமன்யு ஈஸ்வரன் 143 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளாா்.
பௌலிங்கில் சி அணி தரப்பில் அன்ஷுல் காம்போஜ் 5-66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.
இந்நிலையில் இந்திய சி அணி 216 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா டி அணிக்கு 426 ரன்கள் தேவை:
இந்தியா ஏ, டி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய டி அணியின் வெற்றிக்கு 426 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய ஏ அணி 290, 380 டிக்ளோ் ரன்களை எடுத்தது. இந்திய டி அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸில் 19 ஓவா்களில் 62/1ரன்களை எடுத்துள்ளது. மேலும் வெற்றிக்கு 426 ரன்கள் தேவைப்படுகிறது.