124 மீட்டருக்கு சிக்ஸர்! சிபிஎல் தொடரில் அதிரடி! (விடியோ)
கரீபியன் பிரீமியர் லீக்கில் 124 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடித்த விடியோ வைரலாகி வருகிறது.
கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடர் 2013 ஆம் ஆண்டு முதல் மே.இ.தீவுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத்தொடரின் நிகழாண்டு போட்டியொன்றில் 124 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடிக்கப்பட்டுள்ளது.
சிபிஎல் தொடரின் 19ஆவது போட்டியில் கைரன் பொல்லார்டின் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் சாய் ஹேப்பின் கயானா அமேசான் வாரியர் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர் 20 ஓவர்களுக்கு 148/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19.2 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த தொடக்க வீரர் ஷக்கரே பாரிஸ் 2.5ஆவது ஓவரில் குடகேஷ் மோட்டி வீசிய பந்தில் 124 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடித்து அசத்திய இவர் 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அந்த சிக்ஸர் மைதானத்தின் கூரை மீது விழுந்தது. இந்த சிக்ஸர் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் இந்த வீரரை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.