பென் ஸ்டோக்ஸ் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவாரா? ஸ்கேனிங் முடிவுகள் கூறுவதென்ன?

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவாரா என்பது குறித்து ஈசிபி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

DIN

தி ஹண்ட்ரட் தொடரில் சூப்பர் சார்ஜர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கின்போது 2 ரன்களில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேற அவருக்குப் பதிலாக ஹாரி ப்ரூக் களம் கண்டார்.

போட்டி முடிவடைந்த பிறகு, பென் ஸ்டோக்ஸ் ஊன்றுகோல் வைத்து நடந்து வந்து வீரர்களிடம் கை குலுக்கினார்.

இதனையடுத்து, இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் ஆக.21இல் தொடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஆலி போப் கேப்டனாக செயல்பட்டார்.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடவிருக்கிறது.

அக்.7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கலந்துகொள்வார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ( ஈசிபி ) தெரிவித்துள்ளது.

33 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் 105 டெஸ்ட்டில் 6,508 ரன்களும் 203 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

குணமாகிய பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், “ஸ்கேன் செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸுக்கு நேர்மறையான முடிவுகள் வந்துள்ளதால் அவர் குணமாகிவிட்டதாக தெரிகிறது. 6 வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட காயம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பாகிஸ்தான் தொடருக்கு ஆயுத்தமாகுகிறார்” என்றது.

பந்துவீசுவதில் சிரமம்

விளையாடினாலும் பந்து வீச முடியுமா என்ற கேள்விக்கு ஸ்டோக்ஸ் ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடனான நேர்காணலில், “நான் இப்போதுதான் 6.5 வாரங்களுக்குப் பிறகு மெல்ல நடக்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். எனது உடலில் வேறெந்த பாகங்களும் சேதாரம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர்தான் பந்துவீச்சு குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

SCROLL FOR NEXT