ஆஷஸ் தொடருக்காக டேவிட் வார்னரின் விமர்சனத்துக்கு ஜோ ரூட் “இதெல்லம் புதியதா என்ன? இன்னும் 100 நாள்கள் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதும் ஆஷஸ் தொடர் இந்தாண்டு நவ.21-இல் பெர்த் திடலில் மோதுகிறது.
டெஸ்ட்டில் 13,000 ரன்களை கடந்த ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் ஒரு சதம்கூட அடித்ததில்லை என்ற புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
அலைச்சறுக்குப் பலகை விமர்சனம்
சமீபத்தில் டேவிட் வார்னர், “ரூட்டுக்கு எதிராக ஹேசில்வுட் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதனால், ரூட் தனது முன்னங்காலில் இருக்கும் அலைச்சறுக்குப் பலகையை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்குப் பதிலளித்த ஜோ ரூட் பேசியதாவது:
ஜோ ரூட் பதிலடி
சிலர் போட்டியை எப்படி பார்க்கிறார்கள், நேர்காணலில் எப்படி பேசுகிறார்கள் எனத் தெரியாது. எதுவும் புதியதில்லை.
தலைப்புச் செய்திகளை உருவாக்கி இதைப் பெரிய தொடராக்க முயற்சிக்கிறார்கள். இது எதையுமே மாற்றாது.
கடைசி சில தொடர்களில் பலவிதங்களில் கவனச்சிதறல்கள் ஏற்படுகின்றன.
இந்தமுறை தொடரை மகிழ்ச்சியுடன் விளையாட இருக்கிறேன். ஆஸி. அழகான நாடு. கிரிக்கெட் விளையாட உகந்தது. 150 டெஸ்ட் போட்டிகளை விளையாடிவிட்டுச் செல்கிறேன்.
இன்னும் 100 நாள்கள் இருக்கையில் நான் மிகவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.