வெப்பம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 19 போட்டிகளில் 18-இல் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக யுஎஇ, இசிபி அறிவித்துள்ளது.
ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
அபுதாபி, துபையில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன. அங்கு அதிகமான வெப்பம் காரணமாக வீரர்களுக்கு நீரிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுமென போட்டியை அரைமணி நேரம் தள்ளி வைக்கிறார்கள்.
வழக்கமாக அங்கு 6 மணிக்கு நடைபெற இருந்த போட்டிகள் தற்போது 6.30 மணிக்கு தொடங்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணியிலிருந்து இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு முதல் போட்டி யுஎஇ உடன் செப்.10ஆம் தேதி மோதுகிறது.
ஆசிய கோப்பை அணிகள்
குரூப் ஏ- இந்தியா, பாகிஸ்தான், யுஎஇ, ஓமன்
குரூப் பி - இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.