டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான சுனில் நரைன் உலகெங்கிலும் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறார். தற்போது அவர் அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சுனில் நரைன் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் சுனில் நரைன் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதை கௌரவிக்கும் விதமாக 600 என்ற எண் அச்சிடப்பட்ட ஜெர்சி அவருக்கு அபுதாபி நைட் ரைடர்ஸ் சார்பில் வழங்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக சுனில் நரைன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.