நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஃபின் ஆலனை கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது.
அதிரடி பேட்டரான இவரை கொல்கத்தா அணி அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு மினி ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதியில் தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், துபையில் மினி ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் கொல்கத்த அணி விக்கெட் கீப்பர் ஃபின் ஆலனை எடுத்துள்ளது.
162 டி20 போட்டிகளில் 4,431 ரன்கள் குவித்துள்ளார். கீப்பர் பேட்டரான இவருக்கு கொல்கத்தா அணியில் பிரகாசிக்க நல்லதொரு வாய்ப்பாக அமையுமென வர்ணனையாளர்கள் கூறினார்கள்.
இரண்டு முறை கோப்பை வென்ற கேகேஆர் அணிக்கு ரஹானே கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.