கேமரூன் கிரீன் டக் அவுட் : ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன், அடிலெய்ட் டெஸ்ட்டின் மூன்றாவது போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைத் தக்கவைக்கும் முன்னப்பில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலிரண்டு போட்டிகளில் பொறுப்பு கேப்டனாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், உடல்நலக் குறைவால் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால், அவருக்குப் பதிலாக மூத்த வீரர் உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானமாக துவங்கினாலும், அவர்களால் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க இயலவில்லை. அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் பிரைடன் கார்ஸிடமும், ஜேக் வெதரால்டு 18 ரன்கள் மற்றும் மார்னஸ் லாபுசேன் 19 ரன்களில் இருவரும் ஜோப்ரா ஆர்ச்சரிடம் சிக்கினர்.
அவர்களைத் தொடர்ந்து களம்புகுந்த ஐபிஎல்லின் மினி ஏல நாயகன் கேமரூன் கிரீன், 2 பந்துகளை எதிர்கொண்டு ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் பிரைடன் கார்ஸிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்து அசத்தினார்.
கிரீனின் விக்கெட்டின் போது ஆஸ்திரேலிய அணி 24.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் அதிகபட்சத் தொகையான ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஜொலிப்பார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.