விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மிட்செல் ஸ்டார்க்.  படம்: ஏபி
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஸ்டார்க் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகள் எடுத்த 3-ஆவது ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட்டில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியை 3-0 என வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது போட்டியில் மட்டும் 4 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டார்க் இந்தத் தொடரில் 22 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 13-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட்டில் 424, ஒருநாள் போட்டிகளில் 247, டி20யில் 79 என மொத்தமாக 750 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்

  1. முத்தையா முரளிதரன் - 1347

  2. ஷேன் வார்னே - 1001

  3. ஜிம்மி ஆண்டர்சன் - 991

  4. அனில் கும்ப்ளே - 956

  5. க்ளென் மெக்ராத் - 949

ஆஸி. வீரர்களில் அதிக விக்கெட்டுகள்...

1. ஷேன் வார்னே - 1001

2. க்ளென் மெக்ராத் - 949

3. மிட்செல் ஸ்டார்க் - 750

4. பிரெட் லீ - 718

5. நாதன் லயன் - 597

Mitchell Starc reaches a new milestone in international cricket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

SCROLL FOR NEXT