இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி பிப்ரவரி 8 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் நேபாளத்துடன் மோதவிருக்கிறது.
அதற்கு முன்னதாக இலங்கையில் நடைபெறும் வெள்ளைப் பந்து போட்டிகளான மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 22 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆஷஸ் தொடரில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித், ஜோர்டன் காக்ஸ், சஹிப் முகமது ஆகியோர் உலகக் கோப்பை மற்றும் இலங்கை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். லியாம் லிவிங்ஸ்டனும் நீக்கப்பட்டுள்ளார்.
ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியின் போது காலில் காயத்தால் விலகிய ஆர்ச்சரின் பெயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து தொடரில் இடம்பெறாத பென் டக்கெட் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் டங், முதல்முறையாக ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து ஐசிசி உலகக் கோப்பை, டி20 அணி
ஹாரி ப்ரூக் - கேப்டன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர் (உலகக் கோப்பைக்கு மட்டும்), டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ் (இங்கிலாந்து தொடர் மட்டும்), ஜாக் க்ராவ்லி, சாம் கரன், லியாம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டங், லுக் வுட்.
ஒருநாள் அணி
ஹாரி ப்ரூக், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தெல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், ஜாக் க்ராவ்லி, சாம் கரன், லியாம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், ஜோ ரூட், லூக் வுட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.