மார்னஸ் லபுஷேன் படம்: ஏபி
கிரிக்கெட்

லபுஷேனுக்கு தேவை அதிர்ஷ்டம்..! ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை!

ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் ரன்களை குவிக்காமல் இருப்பதும் வெவ்வேறானதென ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

DIN

ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் ரன்களை குவிக்காமல் இருப்பதும் வெவ்வேறானதென ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை தொடரிலும் மார்னஸ் லபுஷேன் முதல் டெஸ்ட்டில் 20 ரன்கள், 2ஆவது டெஸ்ட்டில் 4, 26* ரன்கள் எடுத்தார்.

பிஜிடி தொடரிலிருந்து மார்னஸ் லபுஷேனின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. குறைவான ரன்களில் ஆட்டமிழந்து வரும் லபுஷேனின் பேட்டிங்கில் பிரச்னையில்லை என ஸ்மித் கூறியுள்ளார்.

ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் சப்ஸ்டியூட் வீரராக அறிமுகமாகி டெஸ்ட்டில் முக்கியமான வீரராக மாறியுள்ள லபுஷேன் 57 டெஸ்ட் போட்டிகளில் 4,396 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 46.77ஆக இருக்கிறது.

இது குறித்து தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

என்னைப் பொருத்தவரை லபுஷேன் நன்றாகதான் பேட்டிங் விளையாடுகிறார். ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் ரன்களை குவிக்காமல் இருப்பதும் வெவ்வேறானதென நான் முன்னமே பலமுறைக் கூறியுள்ளேன்.

நாம் ஏற்கனவே அவருடைய பேட்டிங்கை பார்த்துள்ளோம். அவரால் முடியுமென நமக்கே தெரியும்.

தனிப்பட்ட முறையில் லபுஷேன் ஃபார்மில் இல்லையென நான் நினைக்கவில்லை. அவருடைய பயிற்சியைப் பார்க்கிறேன், அவர் விளையாடுவதையும் பார்த்து வருகிறேன். எல்லாவற்றையும் சரியாகவே செய்து வருகிறார். அவருக்கு தேவை சிறிது அதிர்ஷ்டம்தான். அது வந்ததும் எல்லாம் மாறிவிடும்.

ரன்களை குவிப்பதில் ஆர்வமுடையவர் லபுஷேன். அவருடைய திறமைக் குறித்து நமக்கு தெரியும். விரைவில் ரன்களை குவிப்பார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT