ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) படம் | ஐசிசி
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விலகல்! இந்தியாவுக்கு பின்னடைவு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விலகியது பற்றி...

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல், இறுதி செய்யப்பட்ட அணியின் பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இறுதி செய்யப்பட்ட இந்திய அணி

ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி.

பயணம் செய்யாத ரிசர்வ் வீரர்கள்

ஜெய்ஸ்வால், முகமது சீராஜ், ஷிவம் துபே. இவர்கள் மூவரும் தேவைப்படும் பட்சத்தில் துபைக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

இந்தியாவுக்கு பின்னடைவு

வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்டர்களை திணறடித்து வரும் பும்ரா, அணியில் இருந்து வெளியேறியது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இருப்பினும், முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்பியுள்ளது சிறிது சாதகமாக அமைந்துள்ளது. அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் வருண் சக்ரவர்த்தியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது கூடுதல் பலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவா்களுக்கு பிணை வழங்கியதை ரத்து செய்யக் கோரி மனு

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் கோரிக்கை அட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5.94 கோடி காப்பீட்டு பத்திரம்: கல்வித் துறை தகவல்

சந்தன மரத்தின் மகத்துவம்: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -மத்திய குழு அறிக்கை

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: குற்றவியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

SCROLL FOR NEXT