படம் | ஐசிசி
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணியில் மாற்றம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், காயம் காரணமாக லாக்கி ஃபெர்குசனுக்குப் பதிலாக நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து லாக்கி ஃபெர்குசன் விலகியுள்ளார். நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ள கைல் ஜேமிசன் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். அவர் தற்போது மாற்று வீரராக நியூசிலாந்து அணியில் இணைந்துள்ளார்.

30 வயதாகும் கைல் ஜேமிசன் நியூசிலாந்து அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT