ஷர்துல் தாகூர்  ANI
கிரிக்கெட்

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ஷர்துல்!

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் ஷர்துல் விளையாடுவது பற்றி...

DIN

இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப்பில் எசெக்ஸ் அணிக்காக விளையாட இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்துல் தாகூரை, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் எந்த அணியும் அடிப்படை தொகைக்குகூட எடுக்க முன்வரவில்லை.

ஆல் ரவுண்டரான ஷர்துல், இந்திய அணிக்காக 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்கு எசெக்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

வருகின்ற ஜூன் மாதம் இங்கிலாந்து பயணிக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், கவுன்டியில் தனது திறமையை நிரூபித்து, மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT