சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கரமை ஆப்கானிஸ்தான் வீரர் ஃபஸல்ஹக் ஃபரூக்கி தள்ளியதுக்கு முன்னாள் வீரர் கடுமையாக கண்டித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மோதின. இதில் தெ.ஆ. 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தெ.ஆ. பேட்டிங் ஆடியபோது 49.1ஆவது பந்து விளையாடியபோது ரன் ஓடி வந்து கிரீஸின் மறுபக்கத்துக்கு நடந்து சென்ற மார்கரமை ஃபஸல்ஹக் ஃபரூக்கி கோபமாக தள்ளுவார்.
இதற்கு மார்க்ரம் அமைதியாக பேட்டைக் காண்பிக்க ஃபஸல்ஹக் ஃபரூக்கி சிரிப்பதுபோல் கடப்பார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியுள்ளது.
இந்த நிகழ்வின்போது வர்ணனையாளர்களாக இருந்த பொல்லாக், மபாங்வா இதைக் குறித்து பேசினார்கள்.
மபாங்வா: இது நட்பு ரீதியாக நடந்ததா இல்லையா என்பது அதிசயமாக இருக்கிறது. அநேகமாக நட்புறவினால் ஏற்பட்டதாக இருக்கும்.
பொல்லாக்: அப்படியா? இது நட்பினால் ஏற்பட்ட மாதிரி இல்லை
மபாங்வா: தெரியவில்லை. அப்படியில்லாமல் எப்படி இப்படி செய்ய முடியும்? என்றார்.
சன்ரைசரஸ் அணியின் இருவரும் ஒன்றாக விளையாடுகிறார்கள். அதேசமயத்தில் சமீபத்தில் ஃபஸல்ஹக் ஃபரூக்கிக்கு ஐசிசி அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
வெட்கக்கேடு, ஃபஸல்ஹக் ஃபரூக்கிக்கு அபராதம் விதிக்க வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.