ரோஹித் சர்மா 
கிரிக்கெட்

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோஹித் சர்மா நீடிப்பார்: பிசிசிஐ!

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோஹித் சர்மா நீடிப்பார் என்று பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

DIN

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோஹித் சர்மா நீடிப்பார் என்று பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததுடன் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையையும் இழந்தது.

இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டாலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 0-3 என்ற கணக்கில் முழுமையாக தொடரை இழந்து ஒயிட்வாஸ் ஆனது பெறும் விமர்சனத்தை எழுப்பியது.

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியதால் அவருக்குப் பதிலாக துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித்துக்குப் பிறகு பும்ராவே முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பார்டர் - கவாஸ்கர் டிராபி நடந்து கொண்டிருந்த போது, ​​இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ரோஹித் ஷர்மாவும், கௌதம் கம்பீரும் ஒத்துப்போகவில்லை என்றும், அது அணியை பாதிக்கும் என்றும் யூகிக்கப்பட்டது.

பிசிசிஐ அதிகாரிகள், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் மும்பையில் நேற்று விவாதித்தனர்.

சொந்த மண்ணில் ஒரு ஒயிட்வாஷ் உள்பட கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-இல் இந்திய அணி தோல்வியடைந்தது.  அணித் தேர்வுக்குழு புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்திய டெஸ்ட், ஒருநாள் கேப்டனாக தொடர ரோஹித் சர்மா முடிவு செய்துள்ளார்.

சரியான நேரத்தில் இந்தியாவை வழிநடத்த தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரருக்கு தனது முழு ஆதரவையும் வழங்க சர்மா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான ஒருநாள் போட்டிகள் இன்னும் ஆறு வாரங்களில் இந்திய அணி விளையாட இருப்பதால், கேப்டனை மாற்றுவது சரியாக இருக்காது. இது அணிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடவிருக்கிறது. 37 வயதான ரோஹித் சர்மா அந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தகவல்கள் ஊகங்களில் பரவி வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின்னரே ரோஹித் சர்மா அணியில் இருப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT