நாதன் மெக்ஸ்வீனி (கோப்புப் படம்) படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி

ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்ட் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி அறிமுகமானார். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அவர் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்குப் பதிலாக அணியில் மற்றொரு இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டார்.

இளம் வீரரான நாதன் மெக்ஸ்வீனிக்கு ஆஸ்திரேலிய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றார்.

வித்தியாசம் இருக்கிறது

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள நாதன் மெக்ஸ்வீனி, ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய மண்ணில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கு பயிற்சி பெற்றுள்ளேன். அந்த பயிற்சி இதுவரையிலான ஷீல்டு போட்டிகளில் எனக்கு கைகொடுத்துள்ளது. ஆனால், இலங்கையில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கு நான் பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும், இலங்கையில் எதிர்கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

மிகவும் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான மிட்ச் ஸ்வெப்சன் மற்றும் மாட் குன்ஹிமேனுடன் குயின்லாந்தில் வளர்ந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நான் அதிக அளவிலான சுழற்பந்துவீச்சினை எதிர்கொண்டுள்ளேன். அதுவும் தரமான சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடியுள்ளேன். இந்த அனுபவங்களை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முறை எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 ஆம் தேதி காலேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT