ரவீந்திர ஜடேஜா (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ரஞ்சி கோப்பையில் விளையாடும் ரவீந்திர ஜடேஜா!

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார்.

DIN

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார்.

ரஞ்சி கோப்பையில் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி சௌராஷ்டிரம் தில்லிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டிக்கான பயிற்சியில் சௌராஷ்டிர அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் பலரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியது. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு உள்ளூர் போட்டிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரும் ரஞ்சி கோப்பையில் தங்களது அணிக்காக விளையாடவுள்ளனர். அவர்களது வரிசையில் தற்போது ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார்.

ஜடேஜா விளையாடுவது குறித்து சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயதேவ் ஷா தெரிவித்ததாவது: ரவீந்திர ஜடேஜா இன்று வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவார் எனத் தெரிவித்தார்.

ரவீந்திர ஜடேஜா கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு சௌராஷ்டிர அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT