தந்தைக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்த ரிங்கு சிங் படங்கள்: இன்ஸ்டா / சோனு லெஃப்டி.
கிரிக்கெட்

மகன் தந்தைக்காற்றும் உதவி..! தந்தைக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்த ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட்டர் ரிங்கு சிங்கின் தந்தை தனது மகனளித்த பைக்கை ஓட்டிய விடியோ வைரலாகி வருகிறது.

DIN

இந்திய கிரிக்கெட்டர் ரிங்கு சிங் தனது தந்தை கான்சந்திர சிங்குக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்தார். அந்த பைக்கை அவரது தந்தை ஓட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிங்கு சிங் தனது தந்தை கான்சந்திர சிங்குக்கு கவாஸ்கி நிஞ்சா எச்2ஆர் பைக்கை பரிசளித்துள்ளார். அந்த பைக்கினை ஓட்டும்போது தனது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியிலேயே அந்த பைக் எவ்வளவு பிடிக்கும் என்பது தெரிகிறது.

இந்தியாவில் இந்த பைக்கின் விலை ரூ. 5 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங் எல்பிஜி விநியோக நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். உத்தர பிரதேசம் அலிகாரில் அலிகார் மைதானத்துக்கு அருகில் 2 அறைகொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தார். ஆரம்பகாலங்களில் சிக்கல்களை சந்தித்து வந்தார்.

ரிங்கு சிங் பிரபலமான வீரராக மாறிய பிறகும் தனது எல்பிஜி விநியோக வேலையை விடவில்லை. அனைவரிடமும் அதேமாதிரி பழகுவதாக உடன் இருப்பவர்கள் கூறியுள்ளார்கள்.

சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்யவிருக்கிறார். இது குறித்து கான்சந்திர சிங் கூறியதாவது

ரிங்கு, பிரியா இருவருக்கும் ஒருவரையொருவர் ஒரு வருடமாக தெரியும். இருவருக்கும் இருவரையும் பிடிக்கும். ஆனால், இரு வீட்டாரின் சம்மதம் தேவைப்பட்டதால் காத்திருந்தார்கள். தற்போது இருவரும் சம்மதித்துள்ளார்கள் எனக் கூறியிருந்தார்.

இங்கிலாந்துடன் 5 டி20 போட்டியில் ரிங்கு சிங் விளையாடவிருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு: தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா்

அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT