சாம் கான்ஸ்டாஸ் படம் | AP
கிரிக்கெட்

சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்; உஸ்மான் கவாஜா நம்பிக்கை!

இலங்கைக்கு எதிரான தொடரில் சாம் கான்ஸ்டாஸ் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என நம்புவதாக உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான தொடரில் சாம் கான்ஸ்டாஸ் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என நம்புவதாக உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று விளையாடிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பெற்றுள்ளார். ஆனால், அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா அல்லது வேறு இடத்தில் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உஸ்மான் கவாஜா நம்பிக்கை

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என நம்புவதாக உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

உஸ்மான் கவாஜா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுடன் நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். ஏனெனில், நான் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள நாடுகளில் நிறைய விளையாடியுள்ளேன். களமிறங்கும் இடத்தினை அவசியமின்றி மாற்ற வேண்டியதில்லை. உங்களிடம் சிறந்த அணி இருக்கிறது என்றால், அந்த அணியை தொடர்ந்து களமிறக்க வேண்டும். புதிய சூழலில் இளம் வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினாலும், அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, கூப்பர் கன்னோலி போன்ற இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவை ஆஸ்திரேலிய அணி மாற்றமடைந்து வருவதற்கான ஆரம்பகால அறிகுறிகள். நாம் நாமாக இருக்க வேண்டும். 19 வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என நான் கனவிலும் நினைத்தது கிடையாது. ஆனால், இன்று இளம் வீரர்கள் பலர் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான தொடரில் சாம் கான்ஸ்டாஸ் சிறப்பாக விளையாடினார். இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT