சாம் கான்ஸ்டாஸ், ஸ்டீஸ் ஸ்மித் 
கிரிக்கெட்

சாம் கான்ஸ்டாஸுக்கு மிகப் பெரிய அனுபவம் காத்திருக்கிறது: ஸ்டீவ் ஸ்மித்

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மிடில் ஆர்டராக விளையாடுவாரென கேப்டன் ஸ்மித் அறிவித்துள்ளார்.

DIN

இலங்கை தொடரில் ஆஸி. இளம் சாம் கான்ஸ்டாஸ் மிடில் ஆர்டராக விளையாடவிருப்பதாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.

பிஜிடி தொடரில் அறிமுகமான 19 வயதாகும் சாம் கான்ஸ்டாஸ் பும்ரா ஓவரில் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட்டில் சில்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து அசத்தினார்.

முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்த கான்ஸ்டாஸ் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தார்.

இலங்கை உடனான டெஸ்ட் தொடர் நாளை முதல் (ஜன.29) தொடங்குகிறது. அதில் கான்ஸ்டாஸுக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குகிறார் என ஆஸி. இடைக்கால கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

சாம் கான்ஸ்டாஸுக்கு அதிகமாக பயிற்சி தேவைப்படுகிறது. அவர் சரியாக விளையாடாவிட்டால் அது அவருக்கும் ஒரு சிறந்த முன்னேற்றமாக இருக்கும்.

2013இல் நான் இந்தியாவில் முதலிரண்டு டெஸ்ட்டில் சரியாக விளையாடவில்லை. அதனால் அதிகமான பந்துகளை வலைப் பயிற்சியில் விளையாடினேன். பல வீரர்களை நான் வலைப் பயிற்சியில் விளையாடி எனது திறமையை வளர்த்துக் கொண்டேன்.

அதனால், சாம் கான்ஸ்டாஸ் நன்றாக விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவருக்கு மிகப்பெரிய அனுபவம் காத்திருக்கிறது. இது அவருக்கு கற்றலுக்கான மிகப் பெரிய வாய்ப்பாகவும் அமையும் எனக் கூறினார்.

புதியதாக அணியில் ஜோஷ் இங்கிலீஷ் அறிமுகமாகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

பிஜிடி தொடரில் அறிமுகமாகி பின்னர் நீக்கப்பட்ட நாதன் மெக்ஸ்வீனியும் மிடில் ஆர்டரில் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கூடுதலாக ஆஃப் - ஸ்பின் பந்துவீசுவதால் இலங்கையில் நன்றாக இருக்குமென ஸ்மித் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT