உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித். படம்: ஏபி
கிரிக்கெட்

மழை குறுக்கீடு: முதல்நாள் முடிவில் 300 ரன்களை கடந்து வலுவான நிலையில் ஆஸி.!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 330 ரன்கள் குவித்துள்ளது.

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 81.1 ஓவரில் 330/2 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது.

வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

டிராவிஸ் ஹெட் அதிரடியாக 40 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த லபுஷேனின் விக்கெட்டை ஜெஃப்ரி வாண்டர்சே அசத்தலாக கைப்பற்றினார்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்து விளையாடிய கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி 195 ரன்கள் சேர்த்தது.

இதில் இருவருமே சதமடித்தார்கள். கவாஜா 147 ரன்கள் (210 பந்துகள்), ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்கள் (188 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

81ஆவது ஓவரில் மழை குறுகிட்டது. 9 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் மழை நிற்காததால் முதல்நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆஸி. ஸ்கோர் கார்டு

உஸ்மான் கவாஜா - 147*

டிராவிஸ் ஹெட் - 57

மார்னஸ் லபுஷேன் - 20

ஸ்டீவ் ஸ்மித் - 104*

இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வாண்டர்சே தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT