ஸ்டீவ் ஸ்மித், ரிக்கி பாண்டிங் 
கிரிக்கெட்

ஸ்டீவ் ஸ்மித் தலைசிறந்தவரல்ல: ரிக்கி பாண்டிங்

ஸ்டீவ் ஸ்மித்தை தலைசிறந்தவர் எனக் கூறமுடியாதென ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

DIN

ஸ்டீவ் ஸ்மித்தை தலைசிறந்தவர் எனக் கூறமுடியாதென ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது 35ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார். மேலும் தனது 10,000 டெஸ்ட் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ஆஸி. வீரர்களில் நான்காவதாகவும் உலக அளவில் 15ஆவது பேட்டராகவும் இருக்கிறார்.

லாரா, சச்சின், சங்ககாரா, பாண்டிங்குக்கு அடுத்ததாக வேகமாக (205 இன்னிங்ஸ்களில்) 10,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

ஃபேப் போர் எனப்படும் தலைசிறந்த நால்வர் பட்டியலில் ஜோ ரூட் 36, ஸ்மித் 35, வில்லியம்சன் 33, கோலி 30 சதங்களும் அடித்துள்ளார்கள்.

இதில் தலைசிறந்த வீரராக ஸ்டீவ் ஸ்மித்தை கூறுவது விவாதத்துக்கு அழைத்துச் செல்லுமென முன்னாள் ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

இந்தத் தலைமுறையில் ஸ்டீவ் ஸ்மித்தை சிறந்த வீரர் எனக் கூறலாமா? இதில் விவாதிப்பது கடினமாக இருக்கும். ரூட், வில்லியம்சனும் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். ஜோ ரூட் சமீப காலமாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

5 அல்லது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தலைசிறந்த நால்வர்களில் கோலி முன்னிலையும் ரூட் பின்னிலையும் இருந்தார்கள். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ரூட் 19 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டுக்காரர்களை கேட்டால் அவர்கள் ஜோ ரூட் சிறந்தவர் என்பார்கள். அதேபோல் நியூசிலாந்தைக் கேட்டால் வில்லியம்சன், இந்தியர்களை கேட்டால் கோலி என்றும் கூறுவார்கள். ஆனால், ஸ்மித் அடித்துள்ள ரன்களை வைத்துப் பார்த்தால் மற்றவர்களுடன் விவாதிப்பது கடினம்தான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT