வெற்றிக் கொண்டாட்டத்தில் இத்தாலி அணியினர்...  படம்: ஐசிசி
கிரிக்கெட்

முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் இத்தாலி... வரலாறு படைக்குமா?

டி20 உலகக் கோப்பை 2026-இல் தேர்வாகவிருக்கும் இத்தாலி அணி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பை 2026-இல் தேர்வாக இத்தாலி அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மீதமிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி கால்பந்தில் மிகப்பெரிய செல்வாக்கினை செலுத்துகிறது.

தற்போது, கிரிக்கெட்டிலும் இந்த நாடு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, டி20 உலகக் கோப்பை 2026-இல் தேர்வாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026-இல் 20 அணிகள் விளையாட இருக்கின்றன.

20 அணிகள் எப்படி தேர்வாகும்?

கடந்த உலகக் கோப்பை தரவரிசை, டி20 தரவரிசையின்படி நேரடியாக 10 அணிகளும் போட்டியை நடத்தும் 2 அணிகளும் தேர்வாகியுள்ளன.

அமெரிக்காவிலிருந்து ஒன்றும் ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் தலா இரண்டு அணிகளும் ஆசிய - பசுபிக்கில் இருந்து 3 அணிகளும் தேர்வாக இருக்கின்றன.

இதன்படி ஐரோப்பாவின் சமீபத்திய டி20 தகுதிப் போட்டியில் இத்தாலி ஸ்காட்லாந்தை வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஐரோப்பிய தகுதிச் சுற்றில் இருந்து குயெர்ன்சி அணி ஒரு போட்டியிலும் வெல்லாமல் வெளியேறியது.

ஐரோப்பிய டி20 தகுதிச் சுற்றின் புள்ளிப் பட்டியல்

  1. இத்தாலி - 5 புள்ளிகள் (+1.722)

  2. நெதர்லாந்து - 4 புள்ளிகள் (+1.200)

  3. ஜெர்ஸி - 3 புள்ளிகள் (+0.430)

  4. ஸ்காட்லாந்து - 3 புள்ளிகள் (-0.150)

  5. குயெர்ன்சி - 1 புள்ளி (-2.517)

அடுத்ததாக ஜெர்ஸி - ஸ்காட்லாந்து முறையே 3 புள்ளிகள் பெற்றுள்ளதால் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி இத்தாலிக்கு முக்கியமானதாக இருக்கிறது.

இத்தாலி தனது கடைசி போட்டியை நெதர்லாந்துடன் ஜூலை 11ஆம் தேதி மோதுகிறது.

இத்தாலி கடைசிப் போட்டியில் தோற்றாலும் நெட் ரன் ரேட்டில் பாதிக்காமல் இருந்தால் உலகக் கோப்பைக்குத் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Italy are one win away from creating history and qualifying for the 20-over showcase and their skipper is happy to ride the wave of emotion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! நேரில் வர வேண்டாம்! -மா. சுப்பிரமணியன்

நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு!

காயத்ரி மந்திரம் பாடி மோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்!

SCROLL FOR NEXT