ஷுப்மன் கில் - ஜாக் கிராவ்லி மோதல். படம்: ஐசிசி
கிரிக்கெட்

ஷுப்மன் கில் - ஜாக் கிராவ்லி மோதல்..! ஐபிஎல் தொடர் காரணமென முன்னாள் வீரர் கருத்து!

ஆபாசமாக பேசிய ஷுப்மன் கில் குறித்து முன்னாள் வீரர் பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லின் அநாகரிகமான செயல் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணியும் அதே 387க்கு ஆட்டமிழந்தது.

மூன்றாவது நாள் முடிவில் இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங்கை இங்கிலாந்து தொடங்கியது. அதன் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை செலவிட்டார்.

இதனால் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்தார்.

எதனால் சண்டை?

பும்ரா வீசிய 5-ஆவது பந்தில் ஜாக் கிராவ்லிக்கு கையுறையின்மீது பந்துபட்டது. இதனால், அணியின் மருத்துவரை அழைத்தார் ஜாக் கிராவ்லி.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஷுப்மன் கில் ஆவேசம் அடைந்தார். கிண்டலாக கையைத் தட்டிகொண்டே ஜாக் கிராவ்லியை நோக்கி நடந்து எச்சரிக்கும் தொனியில் பேசினார்.

இருவரும் ஆவேசமாகப் பேசிக்கொண்டனர். பின்னர், பென் டக்கெட் உடனும் கில் ஆவேசமாகப் பேசினார்.

இந்த நிகழ்வு இந்திய ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றாலும் பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

ஐபிஎல் விளையாடாததால் மோதல் அதிகரிப்பு

இங்கிலாந்து அந்த ஓவரை கடைசி ஓவராக்க நினைத்தது. அதை தந்திரன் என இந்தியர்கள் நினைத்தார்கள். அப்படியாகத்தான் அது இருந்திருக்கும்.

ஷுப்மன் கில் அப்படி நடக்கக் காரணம் இருக்கிறது. பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில்லை. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதில்லை.

மற்ற அணிகளில் பெரும்பாலும் ஐபிஎல் விளையாடுகிறார்கள். அவர்கள் இந்திய வீரர்களுடன் விளையாடுவதால் அவர்களுடன் பயணிக்கவும் பழகவும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக சில வீரர்களிடம் காழ்ப்புணர்ச்சி அதிகமாக இருந்தது. ஆர்ச்சர் ஜெய்ஸ்வாலுக்கு பந்துவீசும்போது அதன் தீவிரம் சற்று இருந்தது.

இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் விளையாடாததால் இந்திய வீரர்களுடன் மோதல் ஏற்படுகிறது என்றார்.

Former player Sunil Gavaskar has criticized Indian captain Shubman Gill for his indecent behavior.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT