சாய் சுதர்சன்  கோப்புப் படம்
கிரிக்கெட்

சாய் சுதர்சன் ஒரு சூப்பர்ஸ்டார்..! முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

தமிழக வீரர் சாய் சுதர்சனை முன்னாள் ஆஸி. கேப்டன் புகழ்ந்து பேசியதாவது...

DIN

தமிழக வீரர் சாய் சுதர்சனை முன்னாள் ஆஸி. கேப்டன் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் சுதர்சனை சூப்பர்ஸ்டார் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 973 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்க, இந்த வரிசையில் 3-ஆவது இந்தியராக 700 ரன்களை கடந்து சாய் சுதர்சன் சாதனை படைத்தார்.

இங்கிலாந்துடன் ஜூன் 20ஆம் தேதி முதல் போட்டி தொடங்க இருக்கிறது. சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வானார்.

சாய் சுதர்சன் ஒரு சூப்பர் ஸ்டார்

முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது:

யார் அதிக ரன்கள் எடுப்பார்கள் என்பதை மறந்துவிடுங்கள். என்னைப் பொருத்தவரை சாய் சுதர்சன் ஒரு சூப்பர்ஸ்டார்.

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்குவார் என்று கருதுகிறேன்.

இடது கை பேட்டர். அநேகமாக டெஸ்ட்டில் நம்.3-இல் விளையாடுவாரென நினைக்கிறேன்.

இங்கிலாந்து டெஸ்ட்டில் முதல்வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்.3-இல் நேரடியாகச் சென்று விளையாடலாம்.

அனைத்து வகையான ஷாட்டுகளையும் ஆடுகிறார்

சாய் சுதர்சன் தொழில்நுட்பம் ரீதியாக சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் எல்லா வகையான ஷாட்டுகளும் இருக்கின்றன.

டெஸ்ட்டில் விளையாடும் மனநிலையிலும் அவர் தயாராகவே இருக்கிறார்.

சாய் சுதர்சன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். அவர் விளையாடுவதைப் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அவரிடம் இடதுகை வீரர்களுக்கான ’பேக்லிப்ட்’ (அடிக்கும் முன்பு பேட்டை தூக்குவது) இருக்கிறது.

அவர் அனைத்து வகையான ஷாட்டுகளையும் அடிக்கிறார். வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பௌன்சர் பந்துகளை சிறப்பாக ஆடுகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சேதமடைந்த சக்கரத்துடன் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

ரூ.2,000-க்கு விற்கப்படும் கூலி டிக்கெட்..! நியாயமா இதெல்லாம்?

மோடியால் முடியாததை இந்த மு.க.Stalin சாதித்துவிட்டார் என்ற வயிற்றெரிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு

SCROLL FOR NEXT