பாகிஸ்தான் அணி வீரர்கள் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனா?

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷான் மசூத் செயல்பட்டு வருகிறார். டி20 அணியின் கேப்டனான சல்மான் அலி அகா, டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வளர்ச்சியை கவனிக்க குழு ஒன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவிப்பர். அதன் அடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரிலிருந்து, பாகிஸ்தானுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான சுழற்சி தொடங்குகிறது.

இந்த ஆண்டில் பாகிஸ்தான் அணி வெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT