விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மே.இ.தீ. அணி வீரர்கள்.  படம்: ஏபி
கிரிக்கெட்

மே.இ.தீ. அபார பந்துவீச்சு: ஆஸி. 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸி. போட்டி குறித்து...

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.

முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் விளையாடிய ஆஸி. தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார்.

அடுத்து வந்த கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லீஷ் தலா 3, 5 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆஸி. அணி 22/3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் கூட்டணி அமைத்து விளையாடி வருகிறார்.

தற்போது, 25 ஓவர்கள் முடிவில் உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. இதுவரை, ஆஸி. அணி 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

கவாஜா - 33, ஹெட் - 21 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். மே.இ.தீ. அணி சார்பில் ஷமேர் ஜோசப் 2, ஜெயதேன் சீல்ஸ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயாவி.. ஸ்ருதி ஹாசன்!

ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

2025 மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!

நனைந்த கேசமும் அழகு.. நந்திதா ஸ்வேதா!

வரப்பெற்றோம் (18-08-2025)

SCROLL FOR NEXT