ஆஸி. வீரர் ஜோஷ் இங்லீஷ் ஆட்டமிழந்த போது... படம்: ஏபி
கிரிக்கெட்

190-க்கு வீழ்ந்த மே.இ.தீ.: 2-ஆவது இன்னிங்ஸிலும் தடுமாறும் ஆஸி.!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸி. அணியின் பேட்டிங் குறித்து...

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸி. அணி இரண்டாம் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 48, சேஸ் 44 ரன்கள் எடுத்தார்கள்.

ஆஸி. சார்பில் முதல் இன்னிங்ஸில் மிட்செல்ஸ் ஸ்டார்க் 3, கம்மின்ஸ், ஹேசில்வுட், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸி. அணி 33 ஓவர்களுக்கு 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 3 மணி வரை நடந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 13, வெப்ஸ்டர் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் சீல்ஸ், ஷமர், அல்ஜாரி, கிரீவ்ஸ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

3-ஆவது நாள் முழுவதும் ஆஸி. பேட்டிங் விளையாடா விட்டால் மே.இ.தீ. அணி மீதமுள்ள 2 நாள்களில் எளிதாக சேஸ் செய்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், இன்றைய நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

summary

In the match against the West Indies, the Aussies lost 4 wickets in the second innings. Waiting for Aussies Comeback, important 3rd Day of the Match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

இல. கணேசன் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

SCROLL FOR NEXT