ஸ்டீவ் ஸ்மித் படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற ஸ்மித்..! 2-ஆவது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றது குறித்து...

DIN

ஆஸி. நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மேற்கிந்தியத் தீவுக்குச் சென்றடைந்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

பாரபடோஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அடுத்ததாக, 2-ஆவது டெஸ்ட் வரும் ஜூலை 3ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜியாவில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூயார்க்கில் இருந்து பார்படோஸ் சென்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்த புகைப்படம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பவுமா கேட்சைப் பிடிக்க முயலும்போது கை விரலில் காயம் ஏற்பட்டது. அப்போது, ஆட்டத்தை விட்டு வெளியேறிய ஸ்மித் இப்போதுவரை ஓய்வில்தான் இருக்கிறார்.

அடுத்த போட்டியில் ஸ்மித் விளையாடுவாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் மெக்டொனால்டு, “அவரது விரல் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான். மற்றபடி அவர் நிச்சயமாக விளையாடுவார்” எனக் கூறினார்.

Australian star cricketer Steve Smith has arrived in the West Indies. He likey to play 2nd Test against West indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

அன்புமணி ஆதரவு 3 எம்.எல்.ஏ-க்கள் பாமகவில் இருந்து நீக்கம்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

SCROLL FOR NEXT