பென் ஸ்டோக்ஸ் படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

மீண்டும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் பேட்டி!

ஜாஸ் பட்லருக்கு பதிலாக மீண்டும் பென் ஸ்டோக்ஸை கேப்டனாக நியமிக்க ராப் கீ விருப்பம்.

DIN

ஜாஸ் பட்லருக்கு பதிலாக மீண்டும் பென் ஸ்டோக்ஸை கேப்டனாக நியமிக்க இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ விருப்பம் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தேர்வாகாமல் மிக மோசமாக விளையாடி வெளியேறியது. இதனால் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து (டி20, ஒருநாள்) கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. 2022இல் ஓய்வை அறிவித்த அவர் உலகக் கோப்பைக்காக வந்து விளையாடினார். தற்போது மீண்டும் அவரை அணி தேடுகிறது.

புத்திசாலிதனமான கேப்டன்

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பார்க்க வேண்டும். அதனால் என்னென்ன பாதிப்பு வருகிறதென பார்க்க வேண்டும். நான் பார்த்ததிலேயே பென் ஸ்டோக்ஸ்தான் சிறந்த கேப்டன். அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக இருக்கும்.

அவர் மிகவும் புத்திசாலிதனமான கேப்டன். டெஸ்ட்டில் அவரை பார்த்துள்ளோம். அவர் ஆண்களின் தலைவன். வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை எடுக்கும் ஒரு நபர். அழுத்தமான சூழ்நிலைகளில் ‘இதுதான் சரியான பாதை. செல்லுங்கள்’ என அணியை வழிநடத்துபவர் ஸ்டோக்ஸ்தான்.

ஸ்டோக்ஸ் சிறந்த அணித்தலைவர்

அணித்தலைவராக இருக்க ஒரு தகுதி வேண்டும். அது ஸ்டோக்ஸ்டிடம் சிறப்பாக இருக்கிறது. அவர் சிறந்த வீரர் மட்டுமில்லாமல் சிறந்த தலைவரும் ஆவார்.

பென் ஸ்டோக்ஸுக்கு வேலைப் பளு இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மற்ற விஷயங்களிலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

கேப்டனாக யாரைத் தேர்ந்தெடுத்தால் என்னவாகும்? தவறாக சென்றாலும் சரியாக சென்றாலும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை நான் முடிவு செய்தாக வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT