படம் | சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (எக்ஸ்)
கிரிக்கெட்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ராய்பூரில் இன்று (மார்ச் 16) நடைபெற்று வருகிறது. இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக லெண்டல் சிம்மன்ஸ் 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டுவைன் ஸ்மித் 45 ரன்களும், தினேஷ் ராம்தின் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நதீம் 2 விக்கெட்டுகளையும், நெகி மற்றும் பின்னி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா மாஸ்டர்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

SCROLL FOR NEXT