FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

நியூசி. வீரர் மீது மோதிய பாக். வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

18 மார்ச் 2025, 5:58 pm IST
நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா..
பகிர்:

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 91 ரன்களில் ஆல்-அவுட்டான பாகிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. இதனால், நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிக்க: ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

Advertisement

Advertisement

முதல் போட்டியின் 8-வது ஓவரின் போது பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் குஷ்தில் ஷா ரன் எடுக்க ஓடும்போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் சாக் பௌல்க்ஸ் தோள்பட்டையின் மீது தேவையின்றி மோதினார்.

டி20 போட்டி விதிகளை மீறிய குஷ்தில் ஷாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர் ஜெஃப் க்ரோவ் விதித்த தடைகளுக்கு குஷ்தில் ஷா ஒப்புக்கொண்டதால், அவருக்கு எந்த விசாரணையும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ. 869 கோடி இழப்பு! வீரர்களின் ஊதியம் 90% குறைப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments