கிரிக்கெட்

ஆட்டத்தின்போது தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு!

தமிம் இக்பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது...

DIN

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று டாக்கா பிரீமியர் டிவிஷன் லீக் போட்டி தொடரின் ஆட்டத்தில் பங்கேற்றார். அப்போது பீல்டிங் செய்துகொண்டிருந்த தமிமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை செய்ததில் தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானதும், உடனடியாக டாக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் ஏற்பட செய்யப்பட்டது.

ஆனால், தமிமின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பயணம் செய்ய முடியாது எனத் தெரிவித்த மருத்துவர்கள் மைதானத்திற்கு அருகே உள்ள மருத்துமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT