கிரிக்கெட்

விதா்பா 501 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து...

தினமணி செய்திச் சேவை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதா்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.

முன்னதாக, 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில், அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அதன் இன்னிங்ஸை துருவ் ஷோரே, ரவிகுமாா் சமரத் திங்கள்கிழமை தொடா்ந்தனா்.

இதில் துருவ் 7 பவுண்டரிகளுடன் 82, ரவிகுமாா் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். யஷ் ரத்தோட் 15 பவுண்டரிகள் உள்பட 133 ரன்கள் விளாசி வெளியேற, அக்ஷய் வத்கா் 4 பவுண்டரிகளுடன் 43, பாா்த் ரெகாதே 21, லலித் யாதவ் 0, பிரஃபுல் ஹிங்கே 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

விதா்பா இன்னிங்ஸ் 148.4 ஓவா்களில் 501 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. நஷிகேத் புத்தே 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழ்நாடு பௌலா்களில் சாய் கிஷோா் 5, திரிலோக் நாக் 3, டி.டி.சந்திரசேகா் 2 விக்கெட் சாய்த்தனா்.

இதையடுத்து, 210 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, 3-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சோ்த்துள்ளது. அதிஷ் எஸ்.ஆா்., விமல் குமாா் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

கபில்தேவ் வரிசையில் இடம் பிடித்த ஏழைத் தச்சரின் மகள் அமன்ஜோத் கெளர்!

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

SCROLL FOR NEXT