உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஷஃபாலி வர்மா ஏதேனும் சிறப்பாக செய்வார் என உணர்ந்ததாக பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து பிரதிகா ராவல் தொடக்க வீராங்கனையாக மிகவும் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக அவருக்கு காயம் ஏற்பட, அவருக்குப் பதிலாக அணியில் ஷஃபாலி வர்மா மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டார்.
பிரதிகா ராவலுக்குப் பதிலாக மாற்று வீராங்கனையாக அணியில் இணைந்த ஷஃபாலி வர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதிப்போட்டியில் அவர் 87 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஷஃபாலி வர்மா ஏதேனும் சிறப்பாக செய்வார் என உணர்ந்ததாக பிரதிகா ராவல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷஃபாலி வர்மாவுக்கு தனியாக எந்த ஒரு ஊக்கமும் தேவையில்லை. அவர் மனது கூறுவதைக் கேட்டு தன்னம்பிக்கையுடன் விளையாடக் கூடியவர். இறுதிப்போட்டிக்கு முன்பாக, உங்களால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாதது மனதுக்கு கடினமாக இருக்கிறது எனக் கூறினார். இதுபோன்ற விஷயங்கள் சகஜம் என அவரிடம் கூறினேன். இறுதிப்போட்டியில் ஷஃபாலி ஏதேனும் சிறப்பான விஷயத்தை செய்வார் என்ற உணர்வு எனக்கு இருந்தது. நான் உணர்ந்ததைப் போன்று சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு ஷஃபாலி உதவினார் என்றார்.
இதையும் படிக்க: அமன்ஜோத் கௌர், ஹர்லீன் தியோலுக்கு உற்சாக வரவேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.