ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஜோஷ் ஹேசில்வுட், ஷான் அப்பாட் காயம் காரணமாக ஷெஃபில்டு ஷீல்டு தொடரின் போட்டியிலிருந்து விலகினார்கள்.
இதனையடுத்து நடந்த பரிசோதனைக்குப் பிறகு ஷான் அப்பாட் முதல் ஆஷஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஆஷஸ் போட்டி நவ.21ஆம் தேதி பெர்த் திடலில் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகிய நிலையில், மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது அந்த அணியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் விளையாடிவரும் ஜோஷ் ஹேசில்வுட், ஷான் அப்பாட் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்கள்.
இதனையடுத்து நடந்த பரிசோதனைக்குப் பிறகு ஹேசில்வுட் நலமுடன் இருப்பதாகவும் ஷான் அப்பாட் முதல் ஆஷஸ் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.