குவாஹாட்டியில் நடைபெறும் தெனாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சென் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கொல்கத்தா டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணி பாதி ரன்களைக்கூட எடுக்காததால், அதனை மீண்டும் பேட்டிங்கிற்கு அழைக்கும் ஃபாலோ - ஆன் வாய்ப்பு இருந்தும், இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்யுமென அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.