அபிஷேக் சர்மா.  படம்: எக்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
கிரிக்கெட்

310 ரன்கள் குவித்த பஞ்சாப்..! டி20 போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்திய அபிஷேக் சர்மா!

பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் சர்மாவின் சாதனைகள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் சர்மா ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 310 ரன்களை குவித்தது.

ஹைதராபாதில் நடைபெற்ற சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணியும் பெங்காலும் விளையாடின.

பெங்கால் அணி 20 ஓவர்களில் 198/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. 310 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 52 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். முன்னதாக திலக் வர்மா 2024 தொடரில் 152 ரன்கள் குவித்திருந்தார்.

இந்தப் போட்டியின் மூலம் அபிஷேக் சர்மா தனது சாதனை பட்டியல்களை நீட்டியுள்ளார்.

  • இந்திய டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2-ஆவது வீரர்

  • சர்வதேச டி20களில் அதிக ரன்கள் குவித்த முதல் இந்தியர்

  • ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த முதல் இந்தியர்

Punjab captain Abhishek Sharma has broken several records in a single match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கொள்கை எதிரி! பாஜகவோடு விஜய் எந்த அளவுக்கு உறவாடுகிறார்...!” திருமாவளவன் பேட்டி

கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மழை தொடரும்!

சீட் பெல்ட் உயிரைக் காப்பாற்றியது: பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர்

”எதிரிகள் இருக்கிறார்கள்! ஆனால் வலிமையாக இல்லை!” அமைச்சர் ரகுபதி பேட்டி | DMK

அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை: தவெக தலைவர் விஜய்

SCROLL FOR NEXT