மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆஸி. அணியில் மோலினக்ஸ் இணைந்துள்ளதாக அதன் கேப்டன் அலீஷா ஹீலி தெரிவித்தார்.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன.
இதில் மிகவும் எதிர்பார்ப்புமிக்க இந்தியா, ஆஸி. போட்டி ஆந்திராவின் விசாகபட்டினத்தில் தொடங்கியுள்ளது.
8 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் ஆஸி. இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
இந்தப் போட்டியில் இந்தியா வென்றால், முதலிடத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
ஏழு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸி. வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.