ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனியாளாக அணியை வழிநடத்திய ருதுராஜ் ஜெய்க்வாட்டிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
குரூப் பி பிரிவில் மகாராஷ்டிர அணியும் கேரள அணியும் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மகாராஷ்டிர அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தது. அடுத்து 3.2 ஓவர்களில் 5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்ததாக, ருதுராஜ் 151 பந்துகள் விளையாடி 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 0/2 இருக்கும்போது களமிறங்கிய இவர் 164/7 இருக்கும்போது ஆட்டமிழந்தார்.
சதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் ஈடன் ஆப்பிள் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.
இந்த அணியில் ருதுராஜுக்குப் பிறகு, அதிகபட்சமாக ஜலஸ் சக்சேனா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல்நாள் முடிவில் மகாராஷ்டிர அணி 59 ஓவர்களில் 179/7 ரன்கள் எடுத்தது.
கேரள அணி சார்பில் எம்டி. நிதீஷ் 4 , நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
முதல்நாள் முடிவில் விக்கி ஓஸ்ட்வால் (10*), ராமகிருஷ்ண கோஷ் (11*) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.