டிராவிஸ் ஹெட் படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

2027 உலகக் கோப்பை வரை ரோஹித், கோலி விளையாடுவார்களா? டிராவிஸ் ஹெட் கூறியதென்ன?

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வருகிற 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் வரை விளையாடுவார்களா என்பது குறித்து டிராவிஸ் ஹெட் பேசியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வருகிற 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் வரை விளையாடுவார்களா என்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பேசியுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்தும், இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.

ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்துள்ளது. இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இந்த ஒருநாள் தொடர், ரோஹித் மற்றும் கோலியின் கடைசி ஒருநாள் தொடராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி - ரோஹித் சர்மா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகச் சிறந்த வீரர்கள். வெள்ளைப் பந்து போட்டிகளில் விராட் கோலி மிகச் சிறந்த வீரர். அவர் இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், பெரிய அளவில் மிஸ் செய்யப்படுவார்கள். இருவருக்கும் 37 வயதாகிறது என நினைக்கிறேன். இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

Travis Head has spoken about whether senior Indian players Rohit Sharma and Virat Kohli will play until the 2027 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

SCROLL FOR NEXT