ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றிவிட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 3) டி20 தொடர் தொடங்கியது.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராஸா 28 ரன்களும், ரியான் பர்ல் 17 ரன்களும் எடுத்தனர். சீன் வில்லியம்ஸ் 14 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நுவான் துஷாரா, மஹீஷ் தீக்ஷனா மற்றும் துஷான் ஹேமந்தா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா அதிரடியாக 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய கமிந்து மெண்டிஸ் 16 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசினார். குசல் மெண்டிஸ் 38 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய கமிந்து மெண்டிஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடருக்காக ரிஸ்க் எடுக்கத் தயார்: பாட் கம்மின்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.