முகப்பு
கிரிக்கெட்

பந்துவீச்சில் நடராஜன், இங்கிடி அபாரம்! தில்லி கேபிடல்ஸுக்கு எளிய இலக்கு!

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மோசமான பேட்டிங் திறனை வெளிப்படுத்திய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்

Updated On : 1 ஏப்ரல் 2026, 9:47 pm IST
தில்லி கேபிடல்ஸ் வீரர்கள் - AP
பகிர்:

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மோசமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி குறைவான ஸ்கோரைப் பதிவு செய்தது.

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில், லக்னௌ அணிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்து சிறப்பாக பந்துவீசியது. 10 ஓவர்களில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னௌ அணியில் அப்துல் சமாத் திரட்டிய 36 ரன்கள் உதவியால் அந்த அணி 141 ரன்களை எடுத்தது.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தில்லி கேபிடல்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜன், தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். குல்தீப் யாதவ் 2, கேப்டன் அக்சர் படேல் 1 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

அடுத்து, 142 ரன்கள் இலக்குடன் தில்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியும் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்து ரன் திரட்ட தடுமாறி வருகிறது.

summary

Lucknow Super Giants vs Delhi Capitals - 5th Match, Indian Premier League 2026 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.