முகப்பு
கிரிக்கெட்

ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

இமாலய இலக்கை விரட்டிய தில்லி அணி போராடி தோல்வி

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:12 PM
குஜராத் வெற்றி - AP
பகிர்:

புது தில்லி : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் இமாலய இலக்கை விரட்டிய தில்லி அணி போராடி தோல்வியடைந்தது.

தில்லி அருண் ஜெட்லி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அபாரமாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 210 ரன்களைக் குவித்தது. அடுத்து இமாலய இலக்கை விரட்டிய தில்லி அணியில் அதிகபட்சமாக கே எல் ராகுல் 92 ரன்கள் விளாசினார்.

தொடக்க வீரராகக் களமிறங்கிய பதும் நிஷங்கா 24 பந்துகளில் 41 ரன்கள் திரட்டி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

Advertisement

இந்நிலையில், கடைசி 3 ஓவர்களில் தில்லி அணியின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டபோது களத்தில் நின்ற டேவிட் மில்லர் மீது அழுத்தம் அதிகரித்தது. காரணம், அதிரடியில் மிரட்டி குஜராத்தின் வெற்றிவாய்ப்பை பறிக்கும் முனைப்பில் விளையாடிய ராகுல் 17-ஆவது ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் முகமது சிராஜ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி சதமடிக்கும் அருமையானதொரு வாய்ப்பை வெறும் 8 ரன்களில் தவறவிட்டார்.

கடைசி ஓவரில் தில்லி அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் முதல் பந்தை பௌண்டரி தட்டி விட்ட விப்ராஜ் நிகாம் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். 4-ஆவது பந்தை சிக்ஸர் பறக்கவிட்டார் மில்லர்.

கடைசி பந்தில் அவர் ரன் அவுட்டாக, வெற்றி குஜராத் வசம் சென்றது. 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது குஜராத் டைட்டன்ஸ்!

summary

Gujarat Titans won by 1 run

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments