முகப்பு
கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 212 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:33 PM
சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:25 PM

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 212 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது.

Advertisement

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லிக்கு 213 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:26 PM

சென்னை சூப்பர் கிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். முதல் மூன்று போட்டிகளில் சோபிக்காத சஞ்சு சாம்சன், இன்றையப் போட்டியில் அதிரடியில் மிரட்டினார். அவர் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, சஞ்சு சாம்சனுடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசியும், ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசியும் அசத்தினர். ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு அவுட் ஆனார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:26 PM

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in the IPL match against the Delhi Capitals, the Chennai Super Kings have scored 212 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.