முகப்பு
கிரிக்கெட்

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:18 PM
ரன்கள் எடுக்க ஓடும் கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - படம் | AP
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:04 PM

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட் செய்தது.

Advertisement

பில் சால்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் டேவிட் 26 ரன்களும், விராட் கோலி 19 ரன்களும் எடுத்தனர். தேவ்தத் படிக்கல் 18 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 14 ரன்கள், க்ருணால் பாண்டியா 12 ரன்கள் எடுத்தனர்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:05 PM

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் லுங்கி இங்கிடி, குல்தீப் யாதவ் மற்றும் கேப்டன் அக்‌ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகேஷ் குமார் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அரைசதம்; தில்லிக்கு 3-வது வெற்றி!

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தில்லி கேபிடல்ஸ், 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின், கருண் நாயர் 5 ரன்களிலும், சமீர் ரிஸ்வி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் மூன்று விக்கெட்டுகளையும் புவனேஷ்குமார் வீழ்த்தினார். தில்லி கேபிடல்ஸ் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது

இந்த நிலையில், கே.எல்.ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் அக்‌ஷர் படேல் 26 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் ஆனார்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:05 PM

இதனையடுத்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. களமிறங்கியது முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 பந்துகளில் 60 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தும், டேவிட் மில்லர் 10 பந்துகளில் 22 ரன்கள் (ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.

ஆர்சிபி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். க்ருணால் பாண்டியா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தில்லி கேபிடல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Delhi Capitals won by 6 wickets in the IPL match against Royal Challengers Bangalore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.