கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?
சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி குறித்து...
சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் விடியோவை சிஎஸ்கே நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
எம்.எஸ். தோனி 2023 சீசனில் ஐபிஎல் கோப்பை வென்ற பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது, வீரராக மட்டுமே விளையாடிவருகிறார். அதிலும், இந்த சீசனில் காயம் காரணமாக இதுவரை போட்டியில் பங்கேற்காமல் இருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகள் வென்ற அணியாக சிஎஸ்கே (5), மும்பை இந்தியன்ஸ் (5) அணிகள் இருக்கின்றன. இதில் சிஎஸ்கே 2 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டும் இந்தளவுக்கு கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
தற்போது, ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கிறது.
44 வயதாகும் எம்.எஸ். தோனிக்கு பின்னங்காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த சீசனில் விளையாடாமல் இருக்கிறார். அவருக்கு 2023ல் முழங்காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 278 போட்டிகளில் 5,439 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் சிஎஸ்கே அணி ஃபினிசர் இல்லாமல் தடுமாறி வருகிறது. பேட்டிங் ஆர்டரில் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால், பிளேயிங் லெவனில் யாரை எடுக்கபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
MS Dhoni in Keeping Practice! Will He Play in the Match Against Mumbai?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.