தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்து...
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் (டிஎன்சிஏ) ஆடவர், மகளிர் சீனியர் பயிற்சியாளருக்கான பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், சீனியர், ஜூனியர் தேர்வுக்குழுவுக்கும் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எம். செந்தில்நாதன், எம். வெங்கடரமணா பயிற்சியாளராக பதவி வகித்து வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்து தமிழக அணியை வழிநடத்த பயிற்சியாளர் தேவைப்படுகிறது.
இந்தியாவிலேயே கிரிக்கெட்தான் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாக இருக்கிறது. தமிழகத்திலும் கிரிக்கெட் மிகப்பெரிய செல்வாக்கை செலுத்துகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழக அணியை வழிநடத்த பயிற்சியாளர் தேவைப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க மே.10ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைப் பந்து, சிவப்பு பந்து போட்டிகளுக்கான பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறது. 60 வயதுக்குக் கீழான, பிசிசிஐ லெவல் 2 பயிற்சியாளர் சான்றிதழ் அல்லது அதற்கு இணையான வேறு ஏதேனும் ஒரு சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரஞ்சி கோப்பையில் தமிழக அணி கடந்த சீசனில் குரூப் ஏ பிரிவில் 6ஆவது இடம் பிடித்தது. இதில் 7 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்விகள், 4 டிராவில் முடிந்தன.
கடந்த நவம்பரில் எல். பாலாஜியிடம் இருந்து எம். வெங்கடரமணா வெள்ளைப் பந்து அணிக்கு பயிற்சியாளராக சேர்ந்தார். சையத் முஷ்டக் அலி தொடரில் சூப்பர் லீக் சுற்றுக்குத் தேர்வாகாமல் வெளியேறியது. விஜய் ஹசாரே தொடரிலும் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
TNCA invites applications for men's senior head coach roles
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.