யு19 உலகக் கோப்பை: ஆசிய கோப்பையின் தோல்விக்கு, பாகிஸ்தானைப் பழிதீர்க்குமா இந்தியா?
யு19 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் கடைசி சூப்பர் சிக்ஸ் போட்டி குறித்து...
யு19 உலகக் கோப்பையில் கடைசி சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளதால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
யு19 உலகக் கோப்பைப் போட்டிகள் நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தேர்வாக, குரூப் 2-ல் இங்கிலாந்து அணி மட்டுமே தேர்வாகியுள்ளன.
மீதமிருக்கும் ஓர் இடத்திற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டியிடுகின்றன.
புள்ளிப் பட்டியலில் 6 (+3.337) புள்ளிகளுடன் இந்திய அணி சற்று அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியோ 4 ( +1.484) புள்ளிகளுடன் இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் ரேட்டில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.